பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுவயல் சரஸ்வதி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவகம், காவல்துறை, மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினரும் வக்கீல் அப்துல்சித்திக் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பொது இடங்களில் செல்லும் பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story