இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மனைவி பிரேமா (வயது 23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. அதன்பிறகு பிரேமா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரேமா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால், உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story