இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டையை அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி கண்ணம்மாள் என்ற லட்சுமி (வயது 29). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன-் மனைவியிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த கண்ணம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story