மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலி


மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலி
x

வீட்டின் அருகே விளையாடிய போது மின்சாரம் தாக்கி பெண் குழந்தை பலியானது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்த தர்மவேல் மகள் சம்யுக்தா (வயது 3). தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது மின் கம்பத்திற்கு அருகே உள்ள வயரை சம்யுக்தா தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தாள்.

உடனே அவளை காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். பலியான சம்யுக்தாவின் உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் கிராமத்திற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Next Story