ரெயில் முன் தள்ளி மாணவி கொலை: தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததே கொலைக்கு காரணம் - ஜி.கே.வாசன்


ரெயில் முன் தள்ளி மாணவி கொலை: தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததே கொலைக்கு காரணம் - ஜி.கே.வாசன்
x

தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததே கொலைக்கு காரணம் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

பாலியல் வன்முறையாக இருக்கட்டும், ரெயிலில் தள்ளி பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பெண்ணாக இருக்கட்டும், தனி மனித ஒழுக்கம் தான் காரணம். தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு மிக அவசியம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இதை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். மாணவிகள் கடைபிடிக்க வேண்டும். அதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், தவறு செய்பவர்களை ஒரு காலக்கெடுவுக்குள் உடனடியாக தண்டிக் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story