நீரூற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு


நீரூற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீரூற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்கப்பட்டாள்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மேலூர் சாலையில் கண்டாகுளம் ஊருணி இருந்தது. இந்த ஊருணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது. சுற்றிலும் சிறுவர்கள் விளையாடும் மைதானங்கள் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டு குளத்தின் மையப்பகுதியில் கிணறு போன்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் பூங்காவின் நடுவில் அலங்கார நீரூற்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று புத்தாநத்தம் பகுதியில் இருந்து விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த 3 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக அந்த நீருற்று குளத்தில் தவறி விழுந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டனர்.

இந்த நீரூற்று பகுதியில் சுற்றிலும் உயரமான கம்பிவலை அல்லது சுற்றுச்சுவர் அமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story