பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x

முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

பெண் குழந்தைகளுக்கு

முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து இந்த ஆகஸ்ட் மாதம் திங்கள் முதல் அடுத்த வருடம் ஜூன் திங்கள் வரை சிறப்பு முகாம்களை ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் குழந்தை பிறந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பெண் குழந்தைகள் மட்டும் எனில் 2-வது குழந்தை பிறந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 40 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. வருமான சான்று ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சிறப்பு முகாம்

ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் ரூ.50 ஆயிரம் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெயரிலும் ரூ.25 ஆயிரம் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதற்கான ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முன்னதாக பதிவு செய்யப்பட்டு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

எனவே முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் மேற்காணும் பயன்களினை பெற ஆகஸ்ட் 2023 திங்கள் முதல் 2024 ஜூன் திங்கள் வரை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story