மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி ராமதாஸ்


மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி ராமதாஸ்
x

மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

புவனகிரி,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழி சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது,

பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 செயல்திட்டம் உங்களை முன்னேற்றும் வகையில் உருவாக்கின செயல்திட்டம். உங்கள் பிள்ளைகள் நல்ல இலவச கல்வி கற்க வேண்டும். ஒரு பைசா கூட பிள்ளைகள் படிக்க நீங்கள் செலவு செய்ய வேண்டாம். பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை அனைத்து கல்வியும் இலவசமாக அளிக்கப்படும்.

உடல்நிலை சரியில்லை என்றால் தரமான மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். எந்த ஆபரேஷன் ஆக இருந்தாலும் சரி இலவசமாக செய்து தரப்படும்.

அனைத்து குடும்பத்தினருக்கும் வீடுகளிலும் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழகத்தில் 62 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story