பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் - வியாபாரிகள் மகிழ்ச்சி


பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் - வியாபாரிகள் மகிழ்ச்சி
x

பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது.

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு தினசரி சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூர், மேலப்பாவூர், கீழப்பாவூர், சாலைப்புதூர், திரவியநகர், மருதடியூர், திப்பணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்ததனால் அதனை வாங்குவதற்காக கடையம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ரகுமானியாபுரம் ,தென்காசி, கடையநல்லூர்,செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

ஒவ்வொரு ஆடுகளின் மதிப்பும் ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 25,000 வரையில் விற்பனையானது. மொத்தத்தில் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இன்று மட்டும் 1000- க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. இதனால் ஆடுகளை கொண்டு வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story