விருத்தாசலம் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது


விருத்தாசலம் அருகே    ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்


கம்மாபுரம்,

விருத்தாசலம் அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகே ஊ.மங்கலம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள், 4 ஆடுகளை ஓட்டி வந்தனர். இவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் மெதுவாக வந்தது. போலீசாரை கண்டதும் கார், மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெடுஞ்சேரியை சேர்ந்த பசுபதி மகன் மணிகண்டன்(25), மா.கொளக்குடி தாஸ் மகன் பாலகுரு(25) ஆகியோர் என்பதும், குமராட்சி ஒன்றியம் மேலவன்னியூர் மற்றும் விளத்தூரில் இருந்து 4 ஆடுகளை திருடி வந்ததும், காரில் வந்த சிபிராஜ், போலீசாரை கண்டதும் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், பாலகுரு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 4 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான சிபிராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story