ஆடுகள் விற்பனை மும்முரம்


ஆடுகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 25 Jun 2023 2:45 AM IST (Updated: 25 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம்.

இதை யொட்டி கோவை புறநகர் மற்றும் கன்னிவாடி, அன்னூர் மற்றும் கர்நாடக மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதனால் போத்தனூர் ரோடு, உக்கடம் பொன் விழா நகர் உள்பட பல பகுதிகளிலும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. அங்கு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஆட்டு சந்தைகளில் விற்பனை களைகட்டி உள்ளது. ஒவ்வொரு ஆடும் உயிருடன் விலை கிலோ ரூ.550 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story