மின்னல் தாக்கி 8 ஆடுகள் பலி


மின்னல் தாக்கி 8 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழையின்போது மின்னல் தாக்கி 8 ஆடுகள் பலியாகின.

ராமநாதபுரம்

சாயல்குடி,

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 50). பனை தொழிலாளி. இவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் பனை தொழில் செய்து வருகிறார். இவர் ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பனை மரத்தின் அடியில் கட்டி வைத்திருந்த 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் சாயல்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story