உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விழாவை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதில் விழாவின் 3-வது நாளான கரிநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள் என்பதால், அதனை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டை மற்றும் ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், ஆதனூர், பாதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை விற்பனைக்காக நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆடுகளை மதுரை, சேலம், திருச்சி, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் ஒரு ஆடு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story