புத்தாண்டை முன்னிட்டு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்


புத்தாண்டை முன்னிட்டு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
x

புத்தாண்டை முன்னிட்டு சென்னை அம்பத்தூரர் அருகே உள்ள கொற்றவை பத்ரகாளியம்மன் கோவிலில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

சென்னை

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் பானுநகரில் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கொற்றவை பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு 10 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை என 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். புத்தாண்டு தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 வரை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட பத்ரகாளி அம்மனை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.

புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெறுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சங்க தலைவர் கே.மாரியப்பன், செயலாளர் எஸ்.பொன்ராஜ், பொருளாளர் டி.ஜெயக்குமார், துணை பொருளாளர் பொன் ராஜப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story