தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு...!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது.
சென்னை,
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story