வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.53,280
தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னை,
தங்கம் விலை பிரமிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதற்கு அடுத்த நாளும் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story