தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு...! ரூ.42,760-க்கு விற்பனை


தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு...! ரூ.42,760-க்கு விற்பனை
x
தினத்தந்தி 27 Jan 2023 11:17 AM IST (Updated: 27 Jan 2023 11:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டெ இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,345க்கு விற்கப்படுகிறது.

1 More update

Next Story