சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
x

ஒரு கிராம் தங்கம் ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த மே 5-ந்தேதி 44 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Next Story