ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை


ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
x
தினத்தந்தி 16 Feb 2024 5:22 AM GMT (Updated: 16 Feb 2024 5:33 AM GMT)

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதனிடையே கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,760-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story