தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது


தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது
x

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் ஒருநாள் ஏறுவதும், மறுநாள் குறைவதுமாக தங்கம் விலை இருக்கிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்த நிலையில், நேற்று விலை குறைந்தது.

இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ 400 உயர்ந்து ரூ 37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 ஆக உயர்ந்து ரூ4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ 61.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை பங்க்ய்ச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 56,072 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டுடெண் நிப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 16,719 புள்ளிகளில் வர்த்தகமானது.


Next Story