தங்கம் ஒரு பவுன் ரூ.41,440- ஆக உயர்வு


தங்கம் ஒரு பவுன் ரூ.41,440- ஆக உயர்வு
x

தங்கம் ஒரு பவுன் ரூ.41,440- ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. திருச்சியில் நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.41,040 ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.400 உயர்ந்து ரூ.41,440 ஆக அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.5,130-ல் இருந்து ரூ.5,180 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரே நாளில் கிராம் ரூ.50 உயர்ந்தது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Next Story