அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி உள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழசெயல்படும் இந்த கல்லூரியில் திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்வு கட்டண உயர்வை கண்டித்து நேற்று அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ''மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவரை யாரும் தேர்வு கட்டணம் கட்ட வேண்டாம்'' என தெரிவித்தனர். இதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனர்.


Next Story