ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் சாவு


ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் சாவு
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

திருவள்ளூர்

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கீதர் (வயது 30) மற்றும் ராம் ரஞ்சித் கவுதம் (32). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து செய்யார் நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய கீதர் மற்றும் ராம்ரஞ்சித் கவுதமை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story