நல்லம்பள்ளி அருகேபொக்லைன் எந்திரம் மோதி அரசு பஸ் சேதம்


நல்லம்பள்ளி அருகேபொக்லைன் எந்திரம் மோதி அரசு பஸ் சேதம்
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

சின்னம்பள்ளியில் இருந்து தர்மபுரிக்கு நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர். நல்லம்பள்ளி அருகே உள்ள சொரங்கப்பன்புதூர் பகுதியில் சென்றபோது, சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக குழி தோண்டி கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இதில் அரசு பஸ் சேதம் அடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story