அரசு பஸ் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை


அரசு பஸ் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அரசு பஸ் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அரசு பஸ் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

அரசு பஸ் டிரைவர்

ராமநாதபுரம் கொத்ததெரு பகுதியை சேர்ந்தவர் முகணன் (வயது 47). ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகர்ப்பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களான புது அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த மாரீசுவரன் (41), கொத்த தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி(44) ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

பின்னர் சன்னதி தெரு பகுதியில் சென்றபோது மாரீசுவரனின் மனைவி குறித்து முகணன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரீசுவரன் கல்லால் முகணனை அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் சிக்கினர்

இது தொடர்பாக தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து சென்று முகணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மாரீசுவரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story