ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒவ்வொன்றாக கழன்று விழுந்த அரசு பஸ் பாகங்கள்...! - பயணிகள் அதிர்ச்சி


ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒவ்வொன்றாக கழன்று விழுந்த அரசு பஸ் பாகங்கள்...! - பயணிகள் அதிர்ச்சி
x

மதுரையில் மாட்டுத்தாவணி அருகே, அரசுப் பஸ்சில் இருந்து பாகங்கள் கழன்று விழுந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பூ மார்க்கெட் அருகே பஸ் வந்த போது, பஸ்சில் இருந்து ஒரு பகுதி நடுவழியில் கழண்டு கீழே விழுந்தது. இரும்பு கம்பி, பலகை சாலையில் விழுந்து சிதறிய நிலையில், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பினர்.

இதையடுத்து பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற பஸ்சின் ஓட்டுநரும், நடத்துநரும், சிரித்தபடியே சிதறிக் கிடந்த பாகங்களை எடுத்துச் சென்றனர். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story