விக்கிரவாண்டி வழியாககொங்கராம்பூண்டியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பஸ் சேவைபுகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கொங்கராம்பூண்டியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பஸ் சேவையை புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விக்கிரவாண்டி.
விக்கிரவாண்டி அருகே உள்ள கொங்கராம்பூண்டி கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர ஏதுவாக அரசு பஸ் இயக்க வேண்டும் என விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் விக்கிரவாண்டி வழியாக கொங்கராம்பூண்டியில் இருந்து விழுப்புரத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடக்க விழா கொங்கராம்பூண்டியில் நேற்று நடந்தது. விழாவுக்கு வந்த அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ஸ்ரீதர் வரவேற்றார். அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அரசு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பாலு, கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், ஒன்றிய இளைஞரணி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கவியரசன். அசோக், ஏழுமலை. கலைச்செல்வன், ஊராட்சி செயலாளர் பழனிவேல் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.