அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்


அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
x

8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேர்க்கை உதவி மையம்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:- 2023-ம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltrarnrng.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையம் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சூலக்கரை ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் செயல்படுகின்றன.

விண்ணப்ப கட்டணம்

8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7-ந் தேதி ஆகும். பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, பஸ் பாஸ் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முடிந்த பின் வளாக நேர் காணல் தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் 04562 252655 மற்றும் 294 382 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story