கடலூரில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தம்.!
அனைத்து அரசு பேருந்துகளையும் இரவில் பணிமனையில் நிறுத்த நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
கடலூர்,
நெய்வேலியில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து, கடலூரின் பல பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 25க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் இரவில் பணிமனையில் நிறுத்த நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story