விழுப்புரத்தில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று தமிழ்நாடு அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல தலைவர் ஆரிமுத்து தலைமை தாங்கினார். கிளைத்தலைவர் செல்வக்குமார், செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சட்டக்கல்லூரிகளில் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்குவதைப்போல் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழ்நாடு அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.