அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விாிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும். ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இன்று (செவ்வாய்க்கிழமை) கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி முன்பு வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story