பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் 52 பேர் கைது


பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி  அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல்  52 பேர் கைது
x

பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

மறியல் போராட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாைல மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில பிரசார செயலாளர் சுகமதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சாமிநாதன், மாநில செயலாளர் சுரேஷ், முன்னாள் துணைத்தலைவர் பெரியசாமி உள்பட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தின்போது, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு, செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் 1.7.2022 முதல் நிலுவையுடன் அகவிலைப்படி வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

52 பேர் கைது

பின்னர் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 52 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story