அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழுவின் வேலூர் மண்டலம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராஜாமணி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்க மாநில தலைவர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் பல கருத்துரை வழங்கினர்.

போராட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்தல் வேண்டும். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற்று ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் சரவணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story