அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 1:30 AM IST (Updated: 12 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட துணை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத்தொகை, சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்களை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்.115, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அரசாணை எண்.152, எண்.139 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவிட்டால் வருகிற 24-ந் தேதி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர். இதில் மாவட்ட செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story