அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மூலமாக செயல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறை படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ரங்கசாமி, வேலு, விஜயராணி, மாவட்ட துணை தலைவர்கள் வீரபுத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் சாமிதுரை வரவேற்றார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஆய்வக நுட்பனர் சங்க மாநில துணை தலைவர் அன்பழகன், மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் மலர்கொடி, சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் குமாரதேவன், அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பிரேமா உள்பட கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story