நர்சுகள் கைதை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நர்சுகள் கைதை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதுக்கு மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவசங்கர் வரவேற்று பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் அல்போன்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்யாவாணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி-1 வட்டக்கிளை தலைவர் சுரேஷ்பிரபு, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நான்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். முடிவில் மாவட்ட இணை செயலாளர் அமுதவல்லி நன்றி கூறினார்.