ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

ஊட்டி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 4½ லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். நிரந்தர பணியிடங்களை அழிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் மணிப்பூர் சம்பவத்திற்கு உடனடி தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story