அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
மணிப்பூர் மாநில சம்பவத்தை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தைலைவர் அ.சேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்முறைகளை கண்டித்தும், வன்முறைகளை தடுக்க தவறிய மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story