அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்


அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சங்கராபுரம் வட்ட கிளை பேரவை கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட துணை தலைவர் கொளஞ்சிவேலு, வட்ட செயலாளர் பாசில், துணை தலைவர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ஆனந்த் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள 5 லட்சம் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், சங்கராபுரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்ட துணைதலைவர் லட்சுமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் விஜயா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்டார தலைவர் சவரிராஜன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் குமாரதேவன், மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராமஜெயம், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க உட்கோட்ட செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story