அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கரூர்

கரூர் ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் விஜயக்குமார் கண்டன உரையாற்றினார். இதில் குப்புசாமி, தாமோதரன் உள்பட பலர் கொண்டு கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் அதே விகிதத்தில் அதே தேதியில் வழங்கப்படும் என அளித்த உறுதிமொழி படி மத்திய அரசு வழங்கியது போல 1.1.2023 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story