மது போதையில் அரசு மருத்துவமனை பணியாளர்கள்? - வெளியான பகீர் புகார்


மது போதையில் அரசு மருத்துவமனை பணியாளர்கள்? - வெளியான பகீர் புகார்
x

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பணி நீக்கம் உறுதி என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை,

மதுரை ராஜாஜி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சில பணியாளர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சில பணியாளர்கள் மதுபோதையில் பணியில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து மது போதையில் இருக்கும் பணியாளர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், குற்றம் உறுதியானால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணி நீக்கம் உறுதி என்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் சார்பில் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story