பிரேத பரிசோதனை செய்ய தடயவியல் டாக்டர் இல்லாத அரசு மருத்துவமனைகள்


பிரேத பரிசோதனை செய்ய தடயவியல் டாக்டர் இல்லாத அரசு மருத்துவமனைகள்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொலை, மர்மமான சாவு வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைகளில் தடயவியல் டாக்டர் இல்லாததால் உடல்களை பெற உறவினர்கள் அலையும் பரிதாப நிலை உள்ளது.

கோயம்புத்தூர்


குற்றவழக்குகளில் உண்மையை கண்டறிய டாக்டர்கள் வழங்கும் பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய ஆவணமாக கருதப்படு கிறது.

எனவே தான் மர்மச்சாவு, தற்கொலை என்று கூறி தரப்படும் புகாரில் பதிவு செய்யப்படும் சில வழக்குகள் கூட, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அளிக்கும் அறிக்கைக்கு பிறகு கொலை வழக்குகளாக மாற்றப்பட்டு உள்ளன.

பிரேத பரிசோதனை

அந்த பிரேத பரிசோதனை அறிக்கை வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற முக்கிய ஆதாரமாக கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்படுகிறது.

மேலும் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் களும், சம்மந்தப்பட்ட வழக்கில் குற்றத்தை நிரூபிக்க தேவையான சாட்சியாக விளங்குகின்றனர்.

எனவே கொலை, மர்மச்சாவு, தற்கொலை போன்றவை நிகழும் போது அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. அந்த பணியில் டாக்டர்கள், இறந்தவரின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் உள்ளன?. அவற்றின் தன்மை, எவ்வளவு நேரத்திற்கு முன்பு காயம் ஏற்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிடுவார்கள்.

அரசு மருத்துவமனைகள்

இதனால் அது சட்டம் சார்ந்த மருத்துவமாக கருதப்படுகிறது. எனவே தான் சர்ச்சைக்குரிய இறப்பு நிகழும் போது பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ எடுப்பது, சம்மந்தப்பட்ட நபர்களின் தரப்பு டாக்டர்களின் முன்னிலையில் மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தமிழகத்தில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 303 அரசு மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.

இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

கோவை மாவட்டம்

மத்திய அரசு வெளியிட்ட பட்டியலின்படி இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்த டாக்டர்கள் 1,73,384 பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகத்தில் பதிவு செய்த டாக்டர்கள் மொத்தம் 1,35,456 பேர் உள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் (டி.எம்.எஸ்.) கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்ய தடயவியல் டாக்டர்கள் (பேரன்சிக்) நியமிக்கப்படாத நிலை உள்ளது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வேட்டைக்காரன்புதூர், கோட்டூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், வால்பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன.

இந்த அரசு மருத்துவமனை உள்ள பகுதிகளில் மர்மச் சாவு, கொலை, சர்ச்சைக்குரிய இறப்பு நிகழும் போது அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உறவினர்கள் அலைக்கழிப்பு

அங்குள்ள தடயவியல் டாக்டர்கள், இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்கிறார்கள். இதனால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர் களின் உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும் இறந்தவர்களின் உடல்களை பெற உறவினர்களை அலைந்து திரிய வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

கொலை, மர்ம சாவு போன்றவை ஒரு குடும்பம் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஏற்படுத்தும் துயரம் கொடுமையானது.

அதை தாங்கிக் கொள்ளும் அதே வேளையில் இறந்தவர்களின் உடல்களை பெற சில நேரங்களில் அலைக்கழிப்படும் அவலம் நேர்கிறது.

அதுபோன்ற நேரங்களில் உறவினர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் சொல்லில் அடங்காதவை. இது போல் பல மாவட்டங்களில் பிரேத பரிசோ தனை நடைபெறும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பணி தொடர்பாக செல்லும் போலீசாரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் சில அரசு மருத்துவமனைகளில் தடயவியலில் நிபுணத்து வம் இல்லாத டாக்டர்கள், கொலை, மர்மச்சாவு அடைந்தவர்க ளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதாகவும், இதனால் குற்ற வழக்குகளில் சில நேரங்களில் சிக்கல் எழுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

கோர்ட்டில் அறிக்கை

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

தற்கொலை, விபத்து மரணம் போன்ற இயற்கை மாறான இறப்பு நிகழ்கிற போது அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள டாக் டர்களே பிரேத பரிசோதனை செய்வார்கள். இதை செய்வதற்கு எம்.பி.பி.எஸ். படிப்பிலேயே தேர்வு, மற்றும் செயல்முறை பயிற்சி உள்ளது.

இதன் காரணமாக பணியில் உள்ள டாக்டர்கள் வழக்க மாக நடைபெறும் பிரேத பரிசோதனைகளை செய்து விடுவார்கள்.

ஆனால் கொலை, மர்மச்சாவில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய் அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட வேண் டும்.

எனவே அந்த உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவம னைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு தடயவியல் டாக்டர்கள், உடல்களை பிரேத பரிசோத னை செய்யும் போது உள்ளுறுப்புகள், மாதிரிகள் போன்றவற்றை சேகரிக்கிறார்கள்.

தடயவியல்

மேலும் இறந்தவரின் உடலில் ஏற்பட்ட காயம், அவற்றின் தன் மை, சம்பவம் நடந்த விதம் போன்றவற்றை குறிப்பிட்டு பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

அவை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்க ளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைகிறது.

ஆனால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தடயவியல் டாக்டர்களை நியமித்தால், கொலை, மர்மச்சாவில் இறந்தவர்க ளின் உடல்களை உடனடியாக பரிசோதனை செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story