Normal
விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டி தமிழக அரசு உத்தரவு
விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டி தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டி ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கமிட்டியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 15 பேர் உறுப்பினர்களாகவும், எம்.எல்.ஏ. ஒருவர் சிறப்பு அழைப்பாளராகவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உறுப்பினர் செயலாளராகவும் செயல்படுவார்கள் என்றும், இந்த கமிட்டி மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட 25 பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story