கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
x

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் வரை வைரஸ் தொற்றால்பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முக கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story