கூடுதலாக 1450 பஸ்களை இயக்க அரசு உத்தரவு


கூடுதலாக 1450 பஸ்களை இயக்க அரசு உத்தரவு
x

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று 1,450 பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று 1,450 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் அரசு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story