மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கம்-வெண்கல பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவிகள்
மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கம்-வெண்கல பதக்கங்களை அரசு பள்ளி மாணவிகள் வென்றனர்.
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி தமிழேந்தி. இவர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் புதிய விளையாட்டிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். அதே பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மதுமிதா, 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த மாணவிகளை பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story