கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள்


கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள்
x

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

கரூர்

கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரும்போது கோரிக்கை அட்டை அணிந்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முரண்பாடுகள் இருந்து வருகிறது. இதேபோல் 2009-ம் முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு பணியமர்த்தப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதியம் வேறுபாடுகளாக உள்ளது.

இதனால் ஒரே பணி, ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியங்கள் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநாடு நடத்தப்பட்டுள்ளது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கையை முன் வைத்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடவூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் கடந்த 5-ந்தேதியில் இருந்து கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகிறோம், என்றனர்.


Next Story