திருவையாறு அருகே 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி ஆசிரியை பத்திரமாக மீட்பு


திருவையாறு அருகே 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி ஆசிரியை பத்திரமாக மீட்பு
x

முட்புதர்களில் சிக்கிக் கொண்ட ரேவதி, 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடி வந்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு பகுதியில், அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பவரிடம் மர்ம நபர்கள் சிலர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். அதோடு ஆசிரியை ரேவதியை ஆற்றில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதில் ஆற்றின் ஓரம் இருந்த முட்புதர்களில் சிக்கிக் கொண்ட ரேவதி, 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவ்வழியாக சென்று பொதுமக்கள் சிலர் இதனைக் கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து முட்புதர்களின் நடுவே சிக்கிக் கொண்ட ஆசிரியை ரேவதியை பத்திரமாக மீட்பதற்காக தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியையிடம் தீயணைப்பு வீரர்கள் பேச்சு கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி, பின்னர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து அவர் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியையிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து அவரை ஆற்றில் தள்ளிவிட்டுச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story