இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் கைது


இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் கைது

கோயம்புத்தூர்

கோவை

உணவு வாங்கி கொடுக்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

பாலியல் பலாத்காரம்

நான் அன்னூரில் உள்ள தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். பத்திரப்பதிவு தொடர்பாக அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது32) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அன்னூர் கட்ட பொம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி யிருந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை செல்போன் மூலமாக இளநிலை உதவியாளர் பிரபாகரன் தொடர்பு கொண்டார். அப்போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், சாப்பாடு வாங்கி கொடுக்கும் படியும் கேட்டார். நானும் சாப்பாடு வாங்கிக் கொண்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை வீட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

கர்ப்பம்

இந்தநிலையில் எனக்கு உடல் நிலை பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்த இளநிலை உதவியாளருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார். எனவே என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளநிலை உதவியாளர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

பத்திரப்பதிவு ஊழியர் கைது

இளம்பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் இளநிலை உதவியாளர் பிரபாகரன் மீது பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்குப்பதிவு செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்போது அன்னூரில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு கோவையில் உள்ள பத்திரப்பதிவு அலவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும், பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரமும் தெரிய வந்தது. பிரபாகரன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story