விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது- டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்


விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது- டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 April 2023 3:07 PM IST (Updated: 10 April 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்று டிடிவி தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது. மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது.

விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தைதான் கொண்டுவர வேண்டும். பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை. அதில் நான் கருத்து கூறுவது நன்றாக இருக்காது" என்றார்.


Next Story